search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடற்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளில் ஆடுகிறார் டி வில்லியர்ஸ்
    X

    உடற்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளில் ஆடுகிறார் டி வில்லியர்ஸ்

    காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள டி வில்லியர்ஸ் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்காக தனது உடற்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டியில் விளையாடுகிறார்.
    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னணி வீரரும் ஆன டி வில்லியர்ஸ், கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் போது முழங்கை காயத்தால் அவதிப்பட்டார். இதனால் அவர் ஆபரேசன் செய்து கொண்டார். ஆபரேசன் செய்து கொண்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடிக்காமல் உள்ளார்.

    தற்போது அவரது காயம் முழுவதுமாக குணம் அடைந்துள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்காக மீண்டும் விளையாட இருக்கிறார். தற்போது அவரது உடற்தகுதி நன்றாகி விட்டதா? என்பதை அறிவதற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட இருக்கிறார்.

    அங்குள்ள டைடன் அணிக்காக கடைசி இரண்டு டி20 போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாடுகிறார். இதில் உடற்தகுதி பெற்றால், இலங்கை அணிக்கெதிராக இந்த மாதம் கடைசியில் தொடங்கும் டெஸ்ட் தொடரில் அந்த அணியின் கேப்டனாக இடம்பிடிப்பார்.

    அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலும் காயத்தில் இருந்து குணமாகிவிட்டார். அவரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார்.
    Next Story
    ×