search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணியை வழிநடத்த குக்தான் சரியான நபர்: ஜோ ரூட்
    X

    இங்கிலாந்து அணியை வழிநடத்த குக்தான் சரியான நபர்: ஜோ ரூட்

    இங்கிலாந்து அணியை வழிநடத்திச் செல்ல அலஸ்டைர் குக்தான் சரியான நபர் என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ரூட் கூறியுள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் அலஸ்டைர் குக். இளம் வயதிலேயே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணியின் நீண்டகால கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறது.

    இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட வரும்போது இந்த தொடருக்குப்பின் எனது கேப்டன் பதவி பறிபோகலாம் என்று கூறியிருந்தார். தற்போது இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 0-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இதனால் அலஸ்டைர் குக்கின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்று கூறப்படுகிறது. அப்படி குக் கேப்டன் பதவியை இழந்தால், ஜோ ரூட்தான் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் என்ற நிலைமை உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியை வழிநடத்திச் செல்ல சரியான நபர் அலஸ்டைர் குக்குதான் என்று அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘அலஸ்டைர் குக் இன்னும் சில வருடங்கள் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். அந்த பணியை அவர் செய்வார் என்று நம்புகிறேன். ஏனெனில், அவர் ஒரு தலைசிறந்த வீரர். அவரது கேப்டன் பதவிக்குக் கீழ் நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.

    தற்போதைய அணியில் எனது கடமையை நான் அனுபவித்து செய்கிறேன். உண்மையிலேயே அவர்தான் அந்த பதவிக்கு சரியான மனிதர் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×