search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடரில் பகல்-இரவு டெஸ்ட்: இங்கிலாந்து ஒப்புதல்
    X

    ஆஷஸ் தொடரில் பகல்-இரவு டெஸ்ட்: இங்கிலாந்து ஒப்புதல்

    ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகல்-இரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக ஒப்புகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சிட்னி :

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகல்-இரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக ஒப்புகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆஸ்திரேலியாவில் இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்ட இந்த இரண்டு டெஸ்டும் வர்த்தக ரீதியிலும், நேரில் கண்டுகளித்த ரசிகர்களின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக விரைவில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடன் பகல்-இரவு டெஸ்டில் ஆட உள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்தும் பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அனேகமாக பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் நடைபெறலாம். போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
    Next Story
    ×