search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் மீது பிராவோ சட்ட நடவடிக்கை
    X

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் மீது பிராவோ சட்ட நடவடிக்கை

    அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மீது டாரன் பிராவோ சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
    போர் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டாரன் பிராவோ. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து இவர் சமீபத்தில் கழற்றிவிடப்பட்டார். இதை தொடர்ந்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் கேமரூனை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இதை தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டிக்கான அணியில் இருந்து டாரன் பிராவோவை நீக்கி வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் அவர் மிகுந்த அதிருப்தி அடைந்தார்.

    இந்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மீது டாரன் பிராவோ சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

    தன்னை நீக்கியது சட்ட விரோதமானது. இது தொடர்பாக சரியான விளக்கம் அளிக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று டாரன் பிராவோ தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்த சட்ட நடவடிக்கை காரணமாக பிராவோ- வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இடையே மோதல் மீண்டும் வெடித்துள்ளது.
    Next Story
    ×