search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிக்கான ரன்னை எடுத்தது பெருமைக்குரிய தருணம்: பார்த்தீவ்
    X

    வெற்றிக்கான ரன்னை எடுத்தது பெருமைக்குரிய தருணம்: பார்த்தீவ்

    கடினமாக போராடி அணிக்கு திரும்பியதுடன் வெற்றிக்கான ரன்னை எடுத்தது உண்மையிலேயே எனக்கு பெருமைக்குரிய தருணமாகும் என்று இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
    விருத்திமான் சஹா காயமடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆடும் வாய்ப்பை பெற்ற இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அந்த டெஸ்டில் 42, 67 ரன்கள் வீதம் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    பார்த்தீவ் பட்டேல் நேற்று அளித்த பேட்டியில், ‘8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியதால் டெஸ்டுக்கு முன்பாக கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஆனால் கேப்டன் மற்றும் வீரர்கள் அளித்த வரவேற்பு, சகஜமாக பழகிய விதம் என்னை நெகிழ வைத்து விட்டது.

    அதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரர்களின் ஓய்வறைக்கு திரும்பியது போன்ற உணர்வு எனக்குள் எழவில்லை. இந்த டெஸ்டில் வெற்றி இலக்கை எட்டுவதற்கான ரன்னை அடித்தது சிறப்புக்குரிய விஷயமாகும். இதற்கு முன்பு நான் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன்.

    ஆனால் ஒரு போதும் வெற்றிக்காக ரன்னை அடித்ததில்லை. கடினமாக போராடி அணிக்கு திரும்பியதுடன் வெற்றிக்கான ரன்னை எடுத்தது உண்மையிலேயே எனக்கு பெருமைக்குரிய தருணமாகும்.’ என்றார்.
    Next Story
    ×