search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி - டெல்லி இன்று மோதல்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி - டெல்லி இன்று மோதல்

    இந்திய சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியில் வெற்றி நெருக்கடியில் கவுகாத்தி அணி டெல்லியுடன் இன்று மோதுகிறது.
    இந்திய சூப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி கடந்த அக்டோபர் 1-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் இதில் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    மும்பை சிட்டி ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. நேற்றைய போட்டி முடிவு மூலம் டெல்லி டைனமோஸ், கொல்கத்தா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு நுழைந்தன. இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். கேரளா கோல் வித்தியாசத்தில் குறைவாக இருப்பதால் தகுதி பெறவில்லை.

    இன்னொரு அணி எது என்பதில் கவுகாத்தி- கேரளா இடையே போட்டி நிலவுகிறது. இன்று நடைபெறும் 52-வது ஆட்டத்தில் கவுகாத்தி- டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் கவுகாத்தி அணி கண்டிப்பாக வெல்ல வேண்டும். வென்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க முடியும். தோற்றால் வெளியேற்றப்பட்டு கேரளா தகுதி பெறும்.
    Next Story
    ×