search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ரைபிள் கிளப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
    X

    சென்னை ரைபிள் கிளப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

    எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் 2 நாட்கள் நடந்த சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கான 3-வது துப்பாக்கி சுடுதல் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கான 3-வது துப்பாக்கி சுடுதல் போட்டி எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஏர்பிஸ்டல் 40 ஷாட்ஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் அபினவ் விஜய் முதலிடமும், தமிழ்செல்வன் 2-வது இடமும், நிரஞ்சன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இதன் ஜூனியர் ஆண்கள் பிரிவில் அபினவ் விஜய், நிரஞ்சன், பிரனாவ் நாயர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும், பெண்கள் பிரிவில் மீரா ஜெகதீஷ், மோதார்ஷிமி, டாக்டர் மகாலட்சுமி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பெற்றனர்.

    ஸ்டாண்டர்டு பிஸ்டல் 30 ஷாட்ஸ் ஆண்கள் பிரிவில் இளங்கோ முதலிடமும், சுதாகர் 2-வது இடமும், அபினவ் விஜய் 3-வது இடமும், இதன் ஜூனியர் ஆண்கள் பிரிவில் பாரதி சக்தி முதலிடமும், அபினவ் விஜய் 2-வது இடமும், பிரனாவ் நாயர் 3-வது இடமும் பிடித்தனர். சென்டர் பயர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் சுதாகர் முதலிடமும், ஜான் தாமஸ் 2-வது இடமும், டாக்டர் பார்த்தீபன் மனோகரன் 3-வது இடமும் பெற்றனர்.

    25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் டாக்டர் மகாலட்சுமி, டாக்டர் பாவ்ணா, பவித்ரா கிஷோர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும், இதன் ஜூனியர் ஆண்கள் பிரிவில் அபினவ் விஜய் முதலிடத்தையும், பிரனாவ் நாயர் 2-வது இடத்தையும் பிடித்தனர். 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் தமிழ்செல்வன் முதலிடமும், அபினவ் விஜய் 2-வது இடமும், இளங்கோ 3-வது இடமும் பெற்றனர்.

    இதன் ஜூனியர் ஆண்கள் பிரிவில் அபினவ் விஜய் முதலிடத்தை பெற்றார். 50 மீட்டர் ரைபிள் புரோன் ஆண்கள் பிரிவில் பாலாஜி முதலிடமும், அண்ணாமலை 2-வது இடமும் பிடித்தனர். .22 ஓபன் சைட் ஸ்டாண்டர்டு ரைபிள் புரோன் 50 மீட்டர் ஆண்கள் பிரிவில் விஜய் சாமுவேல் வில்சன் முதலிடமும், சந்திரசேகரன் 2-வது இடமும், செந்தில் 3-வது இடமும் பிடித்தனர்.
    Next Story
    ×