search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி சாதனையை சமன் செய்த விராட்கோலி
    X

    டோனி சாதனையை சமன் செய்த விராட்கோலி

    டோனி தலைமையில் இந்திய அணி முதல் 20 டெஸ்ட் போட்டியில் 12 ஆட்டத்தில் வென்று இருந்த சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.
    மொகாலி :

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

    புஜாரா (51 ரன்), கேப்டன் விராட்கோலி (62 ரன்), அஸ்வின் (72 ரன்), ரவீந்திர ஜடேஜா (90 ரன்), ஜெயந்த் யாதவ் (55 ரன்) ஆகியோர் அரை சதத்தை கடந்தனர். கடைசி கட்ட வீரர்களின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் மீண்டு கம்பீரமான நிலையை எட்டியது.

    * இந்த வெற்றியின் மூலம் 1994-ம் ஆண்டுக்கு பிறகு மொகாலியில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டது இல்லை என்ற பெருமையை தக்க வைத்து கொண்டது. இங்கு 13-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும்.

    * இந்திய அணி தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இதற்கு முன்பு இந்திய அணி 1985-87-ம் ஆண்டு கால கட்டத்தில் தொடர்ந்து 17 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததே அதிகபட்சமாகும்.

    * 20 டெஸ்ட் போட்டிகளுக்கு இதுவரை கேப்டனாக இருந்துள்ள விராட்கோலி தலைமையில் இந்திய அணி பெற்ற 12-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் டோனி தலைமையில் இந்திய அணி முதல் 20 டெஸ்ட் போட்டியில் 12 ஆட்டத்தில் வென்று இருந்த சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.

    * இந்த ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஜோரூட் டெஸ்ட் போட்டியில் 11-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக முறை டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
    Next Story
    ×