search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 12-வது சுற்று ஆட்டமும் டிரா
    X

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 12-வது சுற்று ஆட்டமும் டிரா

    நியூயார்க் நகரில் நடந்து வரும் கார்ல்சென் - கர்ஜாகின் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்று ஆட்டமும் டிரா முடிந்தது.
    நியூயார்க் :

    மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின் வெற்றி பெற்றார்.

    9-வது சுற்று ஆட்டம் டிராவாக அமைந்தது. 10-வது சுற்று ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்றார். இதன் மூலம் கார்ல்சென் 5-5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டினார். 11-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 12-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது.

    கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும், செர்ஜி கர்ஜாகின் கருப்பு நிற காய்களுடன் விளையாடினர். இந்த ஆட்டம் யாரும் எதிர்பாராத வகையில் 36 நிமிடங்களுக்குள் முடிவுக்கு வந்தது. 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிராவில் முடிவதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். வழக்கமான சுற்று ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கின்றனர்.

    இருவரும் தலா ஒரு வெற்றி கண்டுள்ளனர். 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று தொடங்கும் டைபிரேக்கர் போட்டியில் 4 ரேபிட் முறை ஆட்டங்கள் நடைபெறும். இதில் ஒவ்வொரு வீரரும் காய்களை நகர்த்தி முடிக்க 25 நிமிடம் எடுத்து கொள்ளலாம்.
    Next Story
    ×