search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கேரளா ஆட்டம் டிரா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கேரளா ஆட்டம் டிரா

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது
    கொல்கத்தா:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இந்த ஆட்டம் அரங்கேறியது. 6-வது நிமிடத்தில் கேரளா அணி முதல் கோல் அடித்தது.

    கேரள அணி வீரர் மெஹ்தாப் கோலை நோக்கி அடித்த பந்தை கொல்கத்தா அணியின் கோல் கீப்பர் மஜூம்தார் தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி சென்றது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹெர்பர்ட் அதனை தள்ளிவிட சக வீரர் வினீத் கோலாக்கினார். 18-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் பியர்சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    இரு அணிகளும் 19 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் கவுகாத்தி அணி தோற்றால் கொல்கத்தா, கேரளா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். 
    Next Story
    ×