search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோதா கமிட்டி அறிக்கை தொடர்பாக கிரிக்கெட் வாரியம் 2-ந்தேதி ஆலோசனை
    X

    லோதா கமிட்டி அறிக்கை தொடர்பாக கிரிக்கெட் வாரியம் 2-ந்தேதி ஆலோசனை

    லோதா குழு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 2-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்தது.

    இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பி.சி.சி.ஐ காலம் தாழ்த்தி வந்தது.

    இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் லோதா குழு அறிக்கை தாக்கல் செய்தது. பரிந்துரையை அமல்படுத்த பி.சி.சி.ஐ எந்த நடவடிக்கையும் எடுக்காததால் லோதா குழு அதிருப்தி அடைந்து இந்த அறிக்கையை சமர்பித்தது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 2-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. லோதா குழு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பதில் அறிக்கையை தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    3-ந்தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ பதில் அறிக்கை தாக்கல் செய்கிறது. லோதா கமிட்டி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×