search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபியில் மேலும் ஒரு குறைந்த ஸ்கோர்: இமாச்சல பிரதேசத்தை 36 ரன்னில் சுருட்டியது ஐதராபாத்
    X

    ரஞ்சி டிராபியில் மேலும் ஒரு குறைந்த ஸ்கோர்: இமாச்சல பிரதேசத்தை 36 ரன்னில் சுருட்டியது ஐதராபாத்

    ரஞ்சி டிராபியில் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் இமாச்சல பிரதேசம் 36 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய ஐதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.
    ரஞ்சி டிராபியின் நான்காவது சுற்று லீக் நேற்று தொடங்கியது. கவுகாத்தியில் நேற்று தொடங்கிய போட்டியில் இமாச்சல பிரதேசம் - ஐதராபாத் அணிகள் மோதின. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இமாச்சல பிரதேசம் 8 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. அப்போது மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதனால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இமாச்சல பிரதேசம் 36 ரன்னில் சுருண்டது. 25 ஓவர்களே தாக்குப்பிடித்த இமாச்சல பிரதேச அணியின் எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. ஐந்து பேர் டக்அவுட் ஆனார்கள். ரஞ்சி டிராபியில் 2000-த்திற்குப் பிறகு எடுக்கும் 4-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஐதராபாத் அணியின் ரவி கிரண் 3 விக்கெட்டும், பண்டாரி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அடுத்து ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் விக்கெட்டும் மளமளவென சரிந்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 99 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. ரிஷி தவான் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    பால்சந்தர் அனிருத் 44 ரன்னுடனும், மிலிந்த் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று ஒருநாள் மட்டுமே 15 விக்கெட்டுக்கள் விழுந்துள்ளது.
    Next Story
    ×