search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்கேல் கிளார்க் தலைமையில் விளையாடியது மிகவும் மோசமான அனுபவம்: மிட்செல் ஜான்சன்
    X

    மைக்கேல் கிளார்க் தலைமையில் விளையாடியது மிகவும் மோசமான அனுபவம்: மிட்செல் ஜான்சன்

    மைக்கேல் கிளார்க் தலைமையில் விளையாடியது மிகவும் மோசமான அனுபவம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். ரிக்கி பாண்டிங் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றதும் மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருந்தார். கடந்த ஆஷஸ் தொடரை இழந்ததும் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தமாக எழுதியுள்ளார். அதில் ஆஸ்திரேலிய அணி இந்தியா சென்றிருந்தபோது அணியின் சில வீரர்கள் புற்று நோய் போன்று இருந்தனர்’’ என்றார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீர்ர மிட்செல் ஜான்சன் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் மைக்கேல் கிளார்க் தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் மோசமான அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ஜான்சன் கூறுகையில் ‘‘கிளார்க் தலைமையிலான அணியில் செயல்பாடுகள் முற்றிலுமாக மாறியது. அது அணியே அல்ல. அணிக்குள் சிறிய குழு இருந்தது. அது மிகவும் நச்சுத்தன்மையாக இருந்தது. இந்த குழு அணியில் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு இருந்தது. அந்த சமயத்தில் எதுவும் நடக்கவில்லை. ஆனால், எந்தவொரு வீரரும் கிளார்க் தலைமையில் சந்தோசமாக அனுபவித்து விளையாடவில்லை.

    நீங்கள் நாட்டிற்காக விளையாடும்போது உங்களுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்வீர்கள். ஆனால் அந்த சந்தோசம் அப்போது இல்லை. எங்களில் இரண்டு பேர் விளையாட விரும்பவில்லை என்பது  மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. மற்றும் கெட்ட நேரமாக இருந்தது’’ என்றார்.

    இந்தியா தொடரின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் ஜான்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×