search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனாவின் சுவாரசை வாங்க விரும்பும் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி
    X

    பார்சிலோனாவின் சுவாரசை வாங்க விரும்பும் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி

    பார்சிலோனா அணிக்காக விளையாடும் லூயிஸ் சுவாரசை மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் வாங்க தயாராக உள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.
    சுவராஸ் உடனான ஒப்பந்தத்தை பார்சிலோனா நீட்டிக்காவிடில், அவரை வாங்க மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் தயாராக உள்ளன என்று ஸ்பெயின் நாட்டின் முன்னணி வாரப்பத்திரிகையான டான் பலோன் குறிப்பிட்டுள்ளது.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி, நெய்மர் உடன் உருகுவே நாட்டின் லூயிஸ் சுவராஸ் இணைந்து விளையாடுகிறார். மூவர் கூட்டணியால் பார்சிலோனா அபார வெற்றிகளை குவித்து வருகிறது.

    தற்போதைய ‘லா லிகா’ சீசனோடு சுவராஸ் பார்சிலோனா கிளப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவடைய இருக்கிறது. அதற்குள் அவருடன் பார்சிலோனா மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவரை வாங்க மான்செஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் தயாராக உள்ளன.

    இதுகுறித்து மான்செஸ்டர் சிட்டியின் தலைமை நிர்வாகி பெர்ரான் சோரியானோ கூறுகையில் ‘‘நாங்கள் ஏற்கனவே பார்சிலோனாவுடன் பேசிவிட்டோம். பார்சிலோனா அணி சுவராசை விட்டுக்கொடுக்க நினைத்தால், அதற்கான வாய்ப்பை நாங்கள் உருவாக்குவோம்’’ என்றார். மான்செஸ்டர் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் நல்ல உறவு இருக்கிறது, இந்த விவகாரத்தால் பார்சிலோனா அதிருப்தியாகி விடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார்.

    பார்சிலோனா அணி சுவாரசுக்கு 180 மில்லியன் யூரோ விலை நிர்ணயிக்கலாம். ஆனால், அந்த தொகைக்கு யுனைடெட் வாங்க விருப்பம் தெரிவிக்காது. அவர்கள் 135 மில்லியன் யூரோ வரை கொடுக்க சம்மதிப்பார்கள். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முன்வருவதால் சுவாரசை விற்க விரும்பாவிட்டாலும், பார்சிலோனாவிற்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சுவாரஸ் மான்செஸ்டர் யுனைடெட் அல்லது மான்செஸ்டர் சிட்டி அணிக்கு செல்வாரா? அல்லது பார்சிலோனாவிலேயே நீடிப்பாரா? என்பது அவரது ஒப்பந்த நீட்டிப்பை பொறுத்து இருக்கிறது.
    Next Story
    ×