search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்: சானியா மிர்சா - ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு தகுதி
    X

    டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்: சானியா மிர்சா - ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

    சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகளுக்கான இறுதிச்சுற்று (டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்) டென்னிஸ் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவி்ட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சீனி தைபே சகோதரிகளான யங்-ஜான் சான் - ஹயோ-சிங் சாங் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் நடப்பு சாம்பியனான சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7-6, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்முலம் சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இந்த தொடரில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்பின் முருகுசா - கார்லா சுவாரஸ் ஜோடியை வீழ்த்தியது. சானியா - ஹிங்கிஸ் ஜோடி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிந்தது. அதன்பின் தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

    Next Story
    ×