search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிதி முறைகேடு புகார்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நெருக்கடி
    X

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிதி முறைகேடு புகார்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நெருக்கடி

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிதி முறைகேடு நடைபெற்று உள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளதால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை சிபாரிசு செய்தது.

    இதில் பல்வேறு பரிந்துரைகளை ஏற்க கிரிக்கெட் மறுத்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில், பரிந்துரைகளை ஏற்கும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், நிதி அளிக்க தடை விதித்தது.

    மேலும் கிரிக்கெட் வாரிய கணக்கு மற்றும் ஒப்பந்தங்களை ஆராய லோதா கமிட்டி சார்பில் தனியாக ஆடிட்டர்களை நியமிக்க உத்தரவிட்டது. இதையடுத்து லோதா கமிட்டி இங்கிலாந்தை சேர்ந்த டெலாய்ட் நிறுவனத்திடம் தணிக்கை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனம் மாநில கிரிக்கெட் சங்கங்களின் 2015-ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்குகளை ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்தது.

    இதில் கிரிக்கெட் வாரியம் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கிய நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிறது. கோவா கிரிக்கெட் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தனிப்பட்ட தேவைக்காக 18 கார்கள் வாங்கி உள்ளனர். அதற்கு டீசல் போட கிரிக்கெட் சங்க கணக்கில் சேர்த்து உள்ளனர்.

    ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் நிர்வாக உறுப்பினர்களுக்கு தங்க நாணயமும், அவர்களது மனைவிகளும் தங்க நகைகளும் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ததால் அதற்கு தனியாக விசாரணை நடத்த உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புது நெருக்கடி உருவாகி உள்ளது.
    Next Story
    ×