search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி
    X

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி

    பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
    பாரிஸ் :

    பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-9, 29-27 என்ற நேர்செட்டில் யிப் புய் யின்னை (ஹாங்காங்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-16, 21-18 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் போன்சாக் பொன்சானாவை சாய்த்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் அந்தோணி சிரிசுகாவிடம் (இந்தோனேஷியா) தோல்வி கண்டு வெளியேறினார்.
    Next Story
    ×