search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்க வீரர்கள் ஆட்டம் கவலை அளிக்கிறது: கவாஸ்கர்
    X

    தொடக்க வீரர்கள் ஆட்டம் கவலை அளிக்கிறது: கவாஸ்கர்

    இந்திய அணி தொடக்க வீரர்களின் ஆட்டம் கவலை அளிப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
    ராஞ்சி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

    இதுவரை நடந்த 3 ஆட்டத்தில் இந்தியா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் டோனி தலைமையிலான இந்தியா இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. சொந்த ஊரில் டோனி அதிரடியை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் நிலை குறித்து முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 3 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. அவர்கள் மோசமான நிலையில் இருப்பது அணிக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    உமேஷ் யாதவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக உள்ளது. இதேபோல் கேதர் ஜாதவும் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். சிறந்த அணியில் அவரும் இருக்கிறார்.

    மொகாலி போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்னில் இருந்த போது டெய்லர் கேட்சை தவறவிட்டார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. டெய்லர் மீது எல் லோருக்கும் அனுதாபம்தான் வரும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    தொடக்க வீரர்களில் ரகானே 3 ஆட்டத்தில் விளையாடி 66 ரன்னும், ரோகித் சர்மா 42 ரன்னும் எடுத்து உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களில் ஒருவர் நீக்கப்படலாம் ரகானேவுக்கு பதிலாக மன்தீப்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×