search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல்விமேல் தோல்வியை சந்திக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு கவலை அடையும் மிஸ்பா
    X

    தோல்விமேல் தோல்வியை சந்திக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு கவலை அடையும் மிஸ்பா

    தோல்விமேல் தோல்விகளை சந்திக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
    கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவானாகத் திகழ்ந்த அணி வெஸ்ட் இண்டீஸ் ஒரு காலகட்டத்தில் அந்த அணியை வீழ்த்த ஆளில்லை என்று கூறும் அளவிற்கு வலுவாக இருந்தது. ஆனால் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்விமேல் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அந்த அணி 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 19 தோல்விகளை சந்தித்துள்ளது, நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அந்த அணி 6 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

    முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1980 ஜனவரி மாதத்தில் இருந்து 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 27 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காத அணியாக திகழ்ந்தது.

    அப்படிப்பட்ட அணி தற்போது தொடர் தோல்வியை சந்தித்து வருவது கவலையளிக்கிறது என்று பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 எனத் தொடரைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

    இந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகத்தில் கொடிகட்டிப் பறந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது தோல்விமேல் தோல்விகளை சந்தித்து வருவது சிறிய ஏமாற்றத்தை அளிக்கிறது. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் இளைஞர்களைக் கொண்டது. அவர்கள் சிறந்த அணியாக மாறுவார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களிடம் அனுபவ குறைபாடு உள்ளது.

    கிளைவ் லாய்டு கேப்டனாக இருந்த காலத்தில் இருந்த வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியைபோல் தற்போதைய அணியை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புவார்கள். தற்போது அவர்களுடைய அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றம்’’ என்றார்.
    Next Story
    ×