search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பிக் பாஷ்’ சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக வாட்சன் நியமனம்
    X

    ‘பிக் பாஷ்’ சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக வாட்சன் நியமனம்

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் வருடந்தோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணியின் கேப்டனாக மைக் ஹசி இருந்தார். தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, அந்த அணியின் டைரக்டராக மாறிவிட்டார்.

    இதனால் கேப்டன் சிட்னி தண்டர் அணியி்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக என்னைத் தேர்வு செய்ததன் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு முன்று வருடங்களாக மைக் ஹசி செய்த பிரமிக்கத்தக்க வகையிலான பணிகளை நிரப்புவதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். அவர் என்ன செய்தாரோ அதையே நான் செய்ய இருக்கிறேன்’’ என்றார்.

    இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் மூன்று வகை கிரிக்கெட்டில் இருந்தும் வாட்சன் ஓய்வு பெற்று தொழில்முறையான டி20 லீக் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
    Next Story
    ×