search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி மைதான கண்ணோட்டம்
    X

    ராஞ்சி மைதான கண்ணோட்டம்

    இந்தியா- நியூசிலாந்து மோதும் 4வது ஒருநாள் போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    ராஞ்சி:

    ராஞ்சி மைதானத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இங்கு இதுவரை 3 போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை. இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டிலும், இலங்கையை 3 விக்கெட்டிலும் வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் பாதியில் ரத்து ஆனது.

    ஆஸ்திரேலிய அணி 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 295 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய அணி 288 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டதே இந்த மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

    வீராட் கோலி 2 ஆட்டத்தில் 216 ரன் எடுத்துள்ளார். அவரும்,இலங்கை வீரர் மேத்யூசும் 139 ரன் குவித்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார். மெண்டீஸ் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும்.

    Next Story
    ×