search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து பங்கேற்பு
    X

    பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து பங்கேற்பு

    இன்று தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கலந்து கொள்கிறார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அதன் பிறகு பங்கேற்ற முதல் போட்டியான டென்மார்க் ஓபன் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் தோல்வி கண்டு வெளியேறினார்.

    இந்த நிலையில் இன்று தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து, ஹாங்காங் வீராங்கனை புய் யின்னை சந்திக்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×