search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியா அணியிடம் சீனா தோல்வி
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியா அணியிடம் சீனா தோல்வி

    ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் தென் கொரியா அணியிடம் சீனா தோல்வி அடைந்தது.
    குயான்டன் :

    4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் கொரியா-சீனா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென் கொரியா அணி 5-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணி ஒரு டிராவும், ஒரு தோல்வியும் கண்டு இருந்தது. சீனா அணி கண்ட 2-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-ஜப்பான் (பிற்பகல் 3.30 மணி), இந்தியா-சீனா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×