search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா வெற்றி
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா வெற்றி

    சிங்கப்பூரில் நடக்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா வெற்றி பெற்றார்.
    சிங்கப்பூர் :

    உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவில் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றனர்.

    ஒயிட் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா 7-5, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6-2, 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சாய்த்தார்.

    Next Story
    ×