search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
    X

    பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

    பார்முலா 1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
    டெக்சாஸ் :

    பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயம் டெக்சாஸ்சில் நடந்தது. இதில் 22 வீரர்கள் கலந்து கொண்டு காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். 308.405 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) சக அணி வீரர் நிகோ ரோஸ்பர்க்கை (ஜெர்மனி) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்தார்.

    பார்முலா 1 போட்டியில் ஹாமில்டன் பெற்ற 50-வது வெற்றி இதுவாகும். லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 1 மணி 38 நிமிடம் 12.618 வினாடியில் கடந்தார். ரோஸ்பர்க் 4.520 நிமிடம் பின்தங்கி 2-வது இடத்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் டேனியர் ரிச்சியர்டோ 3-வது இடம் பெற்றார்.

    18-வது சுற்று பந்தயம் முடிவில் ஜெர்மனி வீரர் ரோஸ்பர்க் (331 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். லீவிஸ் ஹாமில்டன் 305 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பார்முலா 1 கார் பந்தயத்தின் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×