search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்கும் போராட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்கும் போராட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்

    அபுதாபியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ். கடைசி நாளில் 6 விக்கெட்டை வைத்துக் கொண்டு 285 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, யூனிஸ்கான் (127), மிஸ்பா உல் ஹக் (96) ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 224 ரன்னில் சுருண்டது. 228 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 52 ரன்னுடனும், அசாத் ஷபிக் 5 களத்தின் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அசார் அலி 79 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து யூனிஸ்கான் களம் இறங்கினார். பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அசாத் ஷபிக் 58 ரன்னுடனும், யூனிஸ்கான் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 455 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 456 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கடின இலக்குடன் கிரேக் பிராத்வைட், ஜான்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜான்சன் 9 ரன்கள் எடுத்த நிலையில் யாசீர் ஷா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த டேரன் பிராவோ 13 ரன்னும், சாமுவேல்ஸ் 23 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். தொடக்க வீரர்கள் பிராத்வைட் 67 ரன்கள் சேர்த்தார்.

    5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பிளாக்வுட், சேஸ் 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் வி்க்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பிளாக்வுட் 41 ரன்னுடனும், சேஸ் 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    வெற்றிக்கு இன்னும் 285 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன. அபுதாபி மைதானத்தில் ஐந்தாவது நாள் விளையாடுவது மிகவும் கடினம். இதனால் தோல்வியை சந்திக்க வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

    பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெறும்.
    Next Story
    ×