search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாய்லெட் கோப்பைக்குள் என் தலையை அமுக்கியவர் வாட்சன்: சுயசரிதையில் ஜான்சன் தகவல்
    X

    டாய்லெட் கோப்பைக்குள் என் தலையை அமுக்கியவர் வாட்சன்: சுயசரிதையில் ஜான்சன் தகவல்

    பயிற்சி அகாடமியில் இருந்தபோது டாய்லெட் கோப்பைக்குள் என் தலையை அமுக்கியவர் வாட்சன் என்று மிட்செல் ஜான்சன் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்தவர்கள் ஷேன் வாட்சன், மிட்செல் ஜான்சன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வாட்சன் சிறப்பாக திகழ்ந்தார். பந்து வீச்சில் ஜான்சன் சிறந்து விளங்கினார்.

    இருவரும் தற்போது ஆஸ்திரேலியா அணியில் இல்லை. ஜான்சனும், வாட்சனும் 1981-ம் ஆண்டு பிறந்தவர்கள். வாட்சனை விட ஜான்சன் ஐந்து மாதத்திற்கு இளையவர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர்களுக்கு ரோட் மார்ஷ், இயான் சேப்பல், ஜான் இன்வெராரிட்டி மற்றும் டென்னிஸ் லில்லி போன்றோர் பயிற்சி அளித்தனர்.

    தற்போது ஜான்சன் தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இதில் 2000-த்தில் அகாடமியில் தங்களது 19 வயதில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ளார். அப்போது ‘‘நாங்கள் ஒய்வு நேரத்தில் டி.வி.யில் நாடகம் பார்ப்பது வழக்கம். முக்கியமாக எங்களுக்குள் மல்யுத்தம் நடைபெறும்.

    ஒவ்வொரு நாள் இரவும் பொதுவான அறைக்குள் கூடிவிடுவோம். பின்னர் ‘நெய்பர்ஸ்’ நாடகத்தை டி.வி.யில் கண்டுகளிப்போம். நாடகத்தினிடையே விளம்பரம் வரும்போது மல்யுத்தம் சண்டையிட நான் தயாராக இருப்பேன். விளம்பரம் முடியும் வரை இந்த சண்டை நடைபெறும்.

    அப்படி ஒருமுறை நாங்கள் சண்டையிடும்போது என்னை பாத் ரூமிற்குள் இழுத்துச் சென்றார்கள். சிலர் என் தலையை டாய்லெட்டிற்குள் அமுக்கினார்கள். நான் இதை விரும்பவில்லை. எனக்கு கோபம் தலைக்கேறியது. எப்படியோ நான் சமாளித்து அவர்களில் யாரோ ஒருவரின் சட்டையை பிடித்துக் கொண்டு எழுந்தேன். அந்த நேரத்தில் என்னையும் ஒருவர் பிடித்தார்.

    நான் எனது வலது கரத்தை மேலே தூக்கி அடிக்க முயற்சி செய்தேன். அப்போது அவரும் வலது கரத்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்புறம் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம். என்னை அடிக்க வந்தது வாட்சன் என தெரிந்தது.

    உடனே இருவரும் கையை கிழே இறக்கினோம். அவன் என்னுடைய சக நண்பன் என்பதால் நான் அவரை அடிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் கோபமாக இல்லை என்று என்னால் சொல்ல முடியாது. இதில் இருந்து மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது’’ என்றார்.
    Next Story
    ×