search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 கவுண்டி அணிக்காக விளையாடி சாதனைப் படைக்க இருக்கும் இம்ரான் தாஹிர்
    X

    6 கவுண்டி அணிக்காக விளையாடி சாதனைப் படைக்க இருக்கும் இம்ரான் தாஹிர்

    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இங்கிலாந்தின் டெர்பிஷைர் கவுண்டி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் 6 அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 37 வயதாகும் இவர் தற்போதைய ஐ.சி.சி. பந்துவீச்சு தரவரிசையில் ஒருநாள் போட்டியில் 3-வது இடத்திலும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்திலும் உள்ளார்.

    இவரை தற்போது இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணியான டெர்பிஷைர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தின் 6 கவுண்டி அணியில் இடம்பிடித்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்கஸ் நார்த் 2012-ம் ஆண்டு கிளேமோர்கன் அணிக்காக விளையாடும்போது 6 அணிக்காக விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது இம்ரான் தாஹிர் 2-வது வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.

    அடுத்த வருடம் ஜூன் மாதம் டெர்பிஷைர் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன் தாஹிர் நாட்டிங்காம்ஷைர், ஹம்பைஷைர், வார்விக்‌ஷைர், யார்க்‌ஷைர் மற்றும் மிடில்செக்ஸ் ஆகிய அணிக்காக விளையாடியுள்ளார்.
    Next Story
    ×