search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தியது இந்தியா
    X

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தியது இந்தியா

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்திய நேரப்படி மாலை 4.10-க்கும் ஆட்டம் தொடங்கியது. முதல் கால் பகுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ருபிந்தர், உத்தப்பாவிற்கு பந்தை பாஸ் செய்தார். அவர் பந்தை பிரதீப் மோர்யி்டம் அனுப்ப, அதை அவர் கோலாக மாற்றினார். இதனால் 2-வது கால்பகுதியில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது பாதி நேரத்தில் பாகிஸ்தான் பதில் கோல் போட்டது. அந்த அணியின் முகமது ரிஸ்வான் அடித்த பந்தை இந்திய கோல் கீப்பர் தடுக்க தவறினார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் மொகமது இர்பான் ஒரு கோல் அடிக்க இந்தியா 1-2 என பின்தங்கியது.

    அதன்பின் இந்தியாவின் ருபிந்தர் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. அத்துடன் நிற்காமல் ராமன்தீப் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-வது கால்பகுதி முடிவில் இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
    Next Story
    ×