search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

    6 அணிகள் இடையிலான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இன்று இந்திய அணி தனது 3-வது லீக்கில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    குயான்டன்:

    6 அணிகள் இடையிலான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தென்கொரியாவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. தென் கொரியா தரப்பில் ஜெங் ஜூன்வோவும் (11-வது நிமிடம்), இந்திய தரப்பில் லலித்குமார் உபத்யாயும்(33-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

    இந்திய அணி இன்று தனது 3-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுகுறித்து இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறும்போது ‘பாகிஸ்தானுடன் விளையாடுகையில் நமது வீரர்களுக்கு இயல்பாகவே நெருக்கடி அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாகாமல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தும் படி வீரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். சமூக வலைதளங்களை பார்ப்பதை கூட தவிர்க்கும் படி சொல்லி இருக்கிறேன்.

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நிறைய உற்சாகத்தை போட்டிக்கு கொண்டு வரும். இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம். குறிப்பாக உயிர் தியாகம் செய்து எல்லையை காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க நாங்கள் விரும்பவில்லை’ என்றார். மாலை 4 மணிக்கு நடக்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×