search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது.
    கொல்கத்தா:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது. 78-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்ப்பில் கொல்கத்தா வீரர் இயான் ஹூமே கோல் அடித்தார். ஹூமேவுக்கு (கனடா) இது 18-வது கோலாகும். இதன் மூலம் ஐ.எஸ்.எல். வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா என்று 9 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். ஏற்கனவே அந்த அணி ஒரு வெற்றி, 3 டிரா கண்டிருந்தது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புனேயில் அரங்கேறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.- புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன. 
    Next Story
    ×