search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டிக்கு தயாராகிறது ராஜ்கோட் மைதானம்: டிக்கெட் விற்பனை தொடங்கியது
    X

    அறிமுக டெஸ்ட் போட்டிக்கு தயாராகிறது ராஜ்கோட் மைதானம்: டிக்கெட் விற்பனை தொடங்கியது

    அறிமுக டெஸ்ட் போட்டிக்கு ராஜ்கோட் மைதானம் தயாராகி விட்டது என்று சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி ராஜ்கோட்டிற்கு முதல் டெஸ்ட் போட்டியாகும். இதை பிரமாண்டமான வகையில் நடத்த சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது என்று அச்சங்கத்தின் மீடியா மானேஜர் ஹிமான்ஷூ ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமான்ஷூ ஷா மேலும் கூறுகையில் ‘‘சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.

    கடந்த 16-ந்தேதியே ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாட்களில் கவுண்டர் மூலம் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும். சவுத் ஸ்டேண்ட் பாக்ஸ் டிக்கெட் விலை ஒன்றரை லட்சமாகவும் (15 பேர்), வெஸ்ட் ஸ்டேண்ட் பாக்ஸ் டிக்கெட் விலை 75 ஆயிரம் ரூபாயாகவும் (15 பேர்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சவுத் ஸ்டேண்ட் டிக்கெட் விலை ஐந்தாயிரம் முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரையிலும், கிழக்கு ஸ்டேண்ட் டிக்கெட் விலை 700, 600 மற்றும் 500 ரூபாய் வகையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெஸ்ட் ஸ்டேண்ட் டிக்கெட் விலை 1500-ல் இருந்து 1200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

    சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பிரதமர் மோடி, குஜராத் முதல் அமைச்சர் விஜய் ருபானி, முன்னாள் சவுராஷ்டிரா வீரர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.

    சவுராஷ்டிரா சங்கத்தால் நிர்வகிக்கப்படும், ராஜ்கோட் மாநகராட்சிக்கு சொந்தமான மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் 1986-ல் இருந்து 2009 வரை 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்திய வீரர்கள் நவம்பர் 5-ந்தேதியும், இங்கிலாந்து வீரர்கள் 6-ந்தேதியும் ராஜ்கோட் வந்தடைகிறார்கள்.
    Next Story
    ×