search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவிப்பு
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவிப்பு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஷமி அஸ்லாம், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கடந்த போட்டியில் முச்சதம் அடித்த அசார் அலி டக்அவுட்டில் ஆட்டம் இழந்தார். ஷமி அஸ்லாம் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஆசாத் ஷபிக், யூனிஸ் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆசாத் ஷபிக் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். யூனிஸ்கான் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

    இவருக்கு துணையான கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்த யூனிஸ்கான் 127 ரன்னில் ஆட்டம் இழந்தார். அத்துடன் மோதிய வெளிச்சமின்மை காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் 84 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா உல் ஹக் 90 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மிஸ்பா உல் ஹக் 96 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பின் வந்த சர்பிராஸ் அஹமது 56 ரன்கள் எடுத்தார். முகமது நவாஸ் 25 ரன்களும், சோகைல் கான் 26 ரன்களும் எடுக்க, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுக்களும், ஹோல்டர் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    Next Story
    ×