search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்டகாங் டெஸ்ட்: வங்காள தேசம் 248 ரன்னில் சுருண்டது
    X

    சிட்டகாங் டெஸ்ட்: வங்காள தேசம் 248 ரன்னில் சுருண்டது

    சிட்டகாங்கில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வங்காள தேசம் 248 ரன்னில் சுருண்டது. ஸ்டோக்ஸ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    வங்காள தேசம்  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்தது.

    பின்னர் வங்காள தேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தமீம் இக்பால் (78), விக்கெட் கீப்பரும், கேப்டனுமான முஷ்பிகுர் ரஹிம் (48), மெஹ்முதுல்லா (38) ஆகியோரின் ஆட்டத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.

    சாஹிப் அல் ஹசன் 31 ரன்னுடனும், ஷபியுல் இஸ்லாம் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சாஹிப் அல் ஹசன் நேற்று எடுத்திருந்த 31 ரன்னிலேயே மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். இஸ்லாம் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அதன்பின் வந்த சபீர் ரஹ்மான் (19), மெஹெதி (1), கம்ருல் இஸ்லாம் ரபி (0) ஆகியோரை பென் ஸ்டோக்ஸ் விரைவாக வெளியேற்ற, வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 248 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 6 விக்கெட்டுக்களை 28 ரன்னிற்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் 14 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். வங்காள தேசம் 248 ரன்னில் ஆல் அவுட் ஆனதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    45 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. தற்போது இங்கிலாந்து அணி 2-வது இன்னி்ங்சில் 61 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×