search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்டிங்ஸ் இடம்பெறுவது சந்தேகம்
    X

    நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்டிங்ஸ் இடம்பெறுவது சந்தேகம்

    காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா அணி 0-5 என படுதோல்வியடைந்தது. அடுத்து டிசம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    தற்போது விக்டோரியா கோப்பைக்கான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச்சுற்று வெளியேற்றப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக புஷ்ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். இதற்காக நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் இன்றைய போட்டியில் இருந்த நீக்கப்பட்டுள்ளார். பின்னர் அடுத்த வாரம் தொடங்கும் ஷெபில்டு ஷீல்டு சீசனில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

    அவரது கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

    30 வயதாகும் ஹாஸ்டிங்ஸ் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2010-ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி கான்பெர்ராவிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி மெல்போர்னில் 9-ந்தேதியும் நடக்க இருக்கிறது.
    Next Story
    ×