search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஆர்.எஸ். முறைக்கு பி.சி.சி.ஐ. அனுமதி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடைமுறைக்கு வருகிறது
    X

    டி.ஆர்.எஸ். முறைக்கு பி.சி.சி.ஐ. அனுமதி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடைமுறைக்கு வருகிறது

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் டிஆர்எஸ் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொண்டதில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் ஆகியோர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

    ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி இந்த விவாதத்தில் இருந்து சற்று மாறுபட்டு, எதிர்காலத்தில் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தலாம் என்றும், முறைப்படியான டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறையை பரீட்சார்த்த முறையில் பயன்படுத்திட பிசிசிஐ இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடைலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது.

    கடைசியாக 2008- ல் இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொடரில் டிஆர்எஸ் முறை இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்ததால் டிஆர்எஸ் தொழில்நுட்ப முறைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்குப்பின் இந்தியா விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×