search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடியது இந்தியா
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடியது இந்தியா

    4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது.
    குயான்டன் :

    4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது. 2-வது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு ஜப்பானை மிரள வைத்தது. பெனால்டி கார்னரை கோலாக்குவதில் வல்லவரான இந்திய வீரர் ருபிந்தர்பால்சிங் கிடைத்த 10 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 6-ஐ கோலாக மாற்றி அசத்தினார்.

    இதே போல் ரமன்தீப்சிங் 2 கோலும், தல்விந்தர்சிங், யூசுப் அக்பான் தலா ஒரு கோலும் அடித்தனர். முடிவில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது. ஜப்பான் தரப்பில் கென்டா தனகா, ஹிரோமசா ஒச்சாய் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் தென்கொரியாவை நாளை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×