search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: கர்நாடகாவிற்கு எதிராக டெல்லி 90 ரன்னில் சுருண்டது; குஜராத் 187 ரன்னில் ஆல்அவுட்
    X

    ரஞ்சி டிராபி: கர்நாடகாவிற்கு எதிராக டெல்லி 90 ரன்னில் சுருண்டது; குஜராத் 187 ரன்னில் ஆல்அவுட்

    ரஞ்சி டிராபியின் 3-வது சுற்று இன்று தொடங்கியது. கர்நாடகாவிற்கு எதிராக டெல்லி அணி 90 ரன்னில் சுருண்டது. இதேபோல் மற்ற அணிகளின் ஸ்கோரும் கொடுக்கப்பட்டுள்ளன.
    2016-17-ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது சுற்று ஆட்டம் தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெங்கால் - பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்கால் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் மோந்தல் 135 ரன்கள் குவித்தார்.

    இதேபிரிவில் இடம்பிடித்துள்ள குஜாராத் - ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 187 ரன்னில் சுருண்டது. பன்சால் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய ரெயில்வேஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    மும்பைக்கு எதிராக மத்திய பிரதேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எதிராக உத்தர பிரதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது. சமரத் சிங் 115 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அசாம் - விதர்பா அணிகளுக்கு இடையிலான போட்டியில் விதர்பா முதல்நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் சேர்த்துள்ளது.

    கர்நாடகா அணிக்கெதிரான போட்டியில் டெல்லி 90 ரன்னில் சுருண்டது. ஸ்ரீநாத் அரவிந்த் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய கர்நாடகம் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்துள்ளது.

    ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஜார்க்கண்ட் 209 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பங்கஜ் சிங் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ராஜஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

    மகாராஷ்டிராவிற்கு எதிரான போட்டியில் சவுராஷ்டிரா 3 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக்சன் 105 ரன்கள் குவித்தார்.

    ஆந்திராவிற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்துள்ளது. சத்தீஸ்கருக்கு எதிராக ஹரியானா 178 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சத்தீஸ்கர் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. சர்வீசஸ் அணிக்கெதிராக கோவா 2 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் அமோங்கர் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சகுன் காமத் 177 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக திரிபுரா 2 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் கோஷ் 146 ரன்கள் குவித்தார். ஸ்மித் பட்டேல் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். ஐதராபாத் அணிக்கெதிராக கேரளா 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது.
    Next Story
    ×