search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் தேசிய மல்யுத்த போட்டியில் கலந்து கொள்கிறார்
    X

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் தேசிய மல்யுத்த போட்டியில் கலந்து கொள்கிறார்

    ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்கி மாலிக் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறார்.
    பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தொடரில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கல பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். பெண்கள் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெயரைப் பெற்றார்.

    இவர் ஒலிம்பிக்கில் போட்டிக்குப் பிறகு இதுவரை போட்டிகளில் கலந்து கொள்வில்லை. இந்நிலையில் வருகிற 23-ந்தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டாவில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் தெடங்குகிறது. இதில் சாக்சி மாலிக் கலந்து கொள்கிறார்.

    25-ந்தேதி வரை நடைபெறும் போட்டியில் 61-வது ப்ரீ ஸ்டைல், கிரேக்கோ ரோம் ஸ்டைல் மற்றும் 19-வது பெண்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

    ரெயில்வே ஸ்போர்ட்ஸ் பிரோமோசன் போர்ட்டு, சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு உள்பட இந்திய மல்யுத்த பெடரேஷனில் உள்ள அனைத்து அமைப்பும் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாடு முழுவதில் இருந்து 650 மல்யுத்த வீரர் மற்றும் 175 அதிகாரிகள் கோண்டா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    சாக்கி மாலிக் 58 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்கிறார். இவருடன் 57 கிலோ எடை பிரிவில் அமித் தாஹியா, 97 கிலோ எடைப்பிரிவில் மவுசம் காத்ரி, 70 கிலோ எடைப்பிரிவில் அமித் தங்கர், 59 கிலோ எடைப்பிரிவில் ரவிந்தர் சிங் ஆகியோரும் ஹரியானா சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×