search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஃபா கால்பந்து தரவரிசை: கடந்த 6 ஆண்டுகளில் சிறந்த இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்
    X

    பிஃபா கால்பந்து தரவரிசை: கடந்த 6 ஆண்டுகளில் சிறந்த இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்

    பிஃபா கால்பந்து தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 137-வது இடத்தைப் பிடித்து கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் முன்னேறியுள்ளது.
    உலகின் மிகப்பெரிய கால்பந்து கூட்டமைப்பான பிஃபா இன்று அணிகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 11 இடங்கள் முன்னேறி 137-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் சிறந்த தரவரிசை இதுவாகும்.

    கடந்த மாதம் மும்பையில் நடந்த நட்புரீதியான போட்டியில், 114-வது இடத்தில் இருக்கும் போர்ட்டோ ரிகாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலமாக இந்தியா 11 இடங்கள் முன்னேறியுள்ளது.

    அர்ஜென்டினா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரேசில் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கொலம்பியா, சிலி, பிரான்ஸ், போர்ச்சுக்கல், உருகுவே மற்றும் ஸ்பெயின் முறையே 5-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    Next Story
    ×