search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்டகாங் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 258/7
    X

    சிட்டகாங் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 258/7

    சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலைஸ்டர் குக் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் டக்கெட் என்ற தொடக்க பேட்ஸ்மேன் அறிமுகமானார். அதேபோல் வங்காள தேசத்தில் கம்ருல் இஸ்லாம் ரஃபி, மெஹெதி ஹசன் மிராஸ், சபீர் ரஹ்மான் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள்.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக், அறிமுக வீரர் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணி 18 ரன்னாக இருக்கும் முதல் விக்கெட்டை இழந்தது. டக்கெட் 14 ரன்கள் எடுத்த நிலையில் மெஹெதி ஹசன் மிராஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். 4 ரன்கள் எடுத்த நிலையில் குக் சாஹிப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பேலன்ஸ் 1 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் மெஹெதி ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மொயீன் அலி 68 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 52 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு ஆல் ரவுண்டர் வோக்ஸ் அவுட்டாகாமல் 36 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. வோக்ஸ் 36 ரன்னுடனும், ரஷித் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    வங்காள தேச அணியின் புதுமுக வீரர் மெஹெதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
    Next Story
    ×