search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வரலாற்றில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த 2-வது விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ்
    X

    கிரிக்கெட் வரலாற்றில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த 2-வது விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ்

    வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 8 ரன்களை கடந்தபோது 1000 ரன்களை கடந்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ்.
    இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று சிட்டாகாங்கில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி ரன்கள் குவிக்க திணறியது. அந்த அணியின் மொயீன் அலி மற்றும் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஆகியோரின் அரை சதத்தால் சரிவில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 52 ரன்கள் சேர்த்தார்.

    பேர்ஸ்டோவ் இந்த வருடத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணி திணறியபோதெல்லாம் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். வங்காள தேச தொடருக்கு முன் இந்த வருடத்தில் பேர்ஸ்டோவ் 10 போட்டிகளில் 992 ரன்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 8 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த வருடத்தில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

    இதற்கு முன் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் ஒரே வருடத்தில் 1000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 1000 ரன்களை கடந்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். 2000-ல் அவர் 1045 ரன்கள் குவித்திருந்தார். அதன்பின் பேர்ஸ்டோவ் தற்போது 1000 ரன்களை கடந்துள்ளார்.

    வங்காள தேச தொடருக்கு முன் 10 போட்டிகளில் பேர்ஸ்டோப் 992 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் 8 ரன்களை எட்டியபோது ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் 1044 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்தால் ஒரே வருடத்தில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார். பேர்ஸ்டோவ் இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டியுள்ளது. அதன்பின் 2-வது போட்டியும், அடுத்த மாதம் இந்தியாவிற்கு எதிராகவும் இங்கிலாந்து விளையாட உள்ளது.

    கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஏபி டி வில்லியர்ஸ், சங்ககரா, கில்கிறிஸ்ட் ஆகியோர் விக்கெட் கீப்பராக இருந்த காலத்தில் கூட 1000 ரன்களை தாண்டியது கிடையாது. 2001-ம் ஆண்டு சங்ககரா 891 ரன்களும், டி வில்லியர்ஸ் 2013-ல் 933 ரன்களும், கில்கிறிஸ்ட் 870 ரன்களும் சேர்த்துள்ளது.

    இந்தியாவின் விக்கெட் கீப்பரான டோனி 2010-ல் 749 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாகும்.
    Next Story
    ×