search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு
    X

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அணி வீரர்களில் மாற்றம் இல்லை.
    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இப்போட்டிக்கான டாஸ் சற்று முன் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி, பந்துவீச முடிவு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

    முதல் போட்டியைப் போன்று விரைவில் விக்கெட்டை கைப்பற்றி நியூசிலாந்து அணியை சுருட்ட கேப்டன் திட்டமிட்டுள்ளார். பந்துவீச்சாளர்களும் தீவிர பயிற்சியுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்கள் களமிறங்குகின்றனர். நியூசிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போல்ட், ஹென்றி, தேவ்சிச் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரேஸ்வெல், நீஷம் மற்றும் சோதி ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை.

    இரு அணிகளின் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரஹானே, ரோகித் சர்மா, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், பும்ரா.

    நியூசிலாந்து: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுக் ரோஞ்சி, தேவ்சிக், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், மேட் ஹென்ரி.

    Next Story
    ×