search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-மும்பை இன்று பலப்பரீட்சை
    X

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-மும்பை இன்று பலப்பரீட்சை

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிய்ல டெல்லி-மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.

    புதுடெல்லி:

    ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 17-வது ‘லீக்’ ஆட்டம் டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி டைனமோஸ்- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 2 வெற்றி, 1 டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 1-0 என்ற கணக்கில் புனேயையும், கவுகாத்தியையும் வீழ்த்தி இருந்தது. கொல்கத்தாவுடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 0-1 என்ற கணக்கில் கேரளா பிளாஸ்டரிடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி 3-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

    டெல்லி டைனமோஸ் அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. சென்னை அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது. கேரளா, கவுகாத்தி அணிகளிடம் டிரா செய்து இருந்தது. 5 புள்ளியுடன் இருக்கும் டெல்லி அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

    Next Story
    ×