search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கபடி: போலந்து அணியிடம் ஈரான் தோல்வி
    X

    உலக கோப்பை கபடி: போலந்து அணியிடம் ஈரான் தோல்வி

    உலக கோப்பை கபடி போட்டியின் நேற்றைய லீக் ஆட்டம் ஒன்றில் ஈரான் அணி போலந்திடம் தோல்வி கண்டது.
    ஆமதாபாத் :

    3-வது உலக கோப்பை கபடி போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஈரான் அணி 25-41 என்ற புள்ளி கணக்கில் (பி பிரிவு) போலந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 5-வது ஆட்டத்தில் ஆடிய ஈரான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய போலந்துக்கு கிடைத்த 2-வது வெற்றி இது.

    ‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 80-8 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை எளிதில் தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய வங்காளதேச அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி சந்தித்த 4-வது தோல்வி இது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் அமெரிக்கா-கென்யா (இரவு 8 மணி), இந்தியா-இங்கிலாந்து (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×