search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: மாரியப்பன் பேட்டி
    X

    தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: மாரியப்பன் பேட்டி

    தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் கூறினார்.
    ஓசூர் :

    பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனுக்கு, தேசிய மனித வள மேம்பாட்டு துறையின் ஓசூர் பிரிவின் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரியப்பன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாரா ஓலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில், கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இதே போல மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்து, நம் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் ஆகும்.

    விளையாட்டு துறையில் உள்ள வீரர்கள், மாவட்ட அளவில், மாநில அளவிலான போட்டிகளுடன் நிறுத்தி கொள்ளாமல், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் விளையாட்டு துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி, வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே எனது குறிக்கோள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×