search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற 2-வது கேப்டன் டோனி
    X

    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற 2-வது கேப்டன் டோனி

    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 108 வெற்றிகளை பெற்று அதிக வெற்றிகளை பெற்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் மகேந்திர சிங் டோனி.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறார். இந்திய அணியின் ராசியான கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ள டோனி இன்றைய வெற்றியின் மூலம் மற்றொரு பெருமையை பெற்றுள்ளார்.

    டோனி தலைமையில் இந்திய அணி பெறும் 108-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    ஆலன் பார்டர் 107 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் குரோஞ்ச் 99 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி கேப்டன் பிளம்மிங் 98 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் ஸ்மித் 92 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×