search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: டிகாக் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: டிகாக் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி

    முதல் ஒருநாள் கிரிக்கெட்யில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டிகாக் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றியடைந்தது
    செஞ்சூரி:

    5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    முதல் போட்டி செஞ்சூரியில் பகல் - இரவாக நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ் ஆஸ்திரேலியாவை முதலில் விளையாட அழைத்தார்.

    ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. பெய்லி 74 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹாஸ்டிங்ஸ் 51 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) வார்னர் 40 ரன்னும் எடுத்தனர். பெகுல்வாயோ 4 விக்கெட்டும், ஸ்பெயின் 2 விக்கெட்டும், இம்ரான்தாக்ரி, பாலை தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    295 ரன் இலக்குடன் தென்ஆப்பிரிக்க களம் இறங்கியது. தொடக்க வீரர் குயின்டன் டிகாக்கின் அதிரடியான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணி 36.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டிகாக் 113 பந்துகளில் 178 ரன் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 11 சிக்சர் களும் அடங்கும். மற்றொரு தொடக்க வீரர் ரூசோ 45 பந்தில் 63 ரன் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஸ்காட் போலந்து 3 விக்கெட் சாய்த்தார்.

    2-வது ஆட்டம் ஜோகன்ஸ் பர்க்கில் நாளை நடக்கிறது.
    Next Story
    ×