search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச போட்டியில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் இடம் பெற வைக்காதீர்: அனுராக் தாகூர் வேண்டுகோள்
    X

    சர்வதேச போட்டியில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் இடம் பெற வைக்காதீர்: அனுராக் தாகூர் வேண்டுகோள்

    சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் இடம் பெற வைக்கக்கூடாது என்று ஐ.சி.சி.க்கு, அனுராக் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மும்பை :

    எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு தற்போது சுமுகமாக இல்லை. இப்போதைக்கு பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டை மனதில் கொண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் பல அணிகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் இடம் பெற வைக்கக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐ.சி.சி.) கேட்டுக்கொண்டுள்ளோம். 

    அதே சமயம் லீக்கை தாண்டி அரைஇறுதியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை வந்தால் அதை தவிர்க்க முடியாது’ என்றார். 

    பொதுவாக பெரிய தொடர்களில் ரசிகர்களை கவரும் வகையில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே குரூப்பில் சேர்ப்பார்கள். இத்தகைய சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. இன்னும் 7 மாதங்களில் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×