search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி வலுமையான அடிப்படையோடு முறையான கிரிக்கெட் வீரர்: லஷ்மண் சொல்கிறார்
    X

    விராட் கோலி வலுமையான அடிப்படையோடு முறையான கிரிக்கெட் வீரர்: லஷ்மண் சொல்கிறார்

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வலுமையான அடிப்படையோடு முறையான கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் வீரர் லஷ்மண் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண். 2001-ம் ஆண்டு லஷ்மண் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 281 ரன்கள் குவித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த சதமாக கருதப்படுகிறது.

    இவர் விராட் கோலி குறித்து பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் விராட் கோலியை பற்றி அதிக அளவில் குறிப்பிடுகிறேன் என்றால், அவருடைய வலியை அவருக்குத் தெரியும். அவைகளுக்கு பின்னால் அவர் நிற்கிறார். வலுமையான அடிப்படையைப் பெற்றுள்ள அவர் ஒரு முறையான கிரிக்கெட் வீரர்.

    நீங்கள் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தினால், நீங்கள் வலுமையான அடிப்படையை பெற்றிருப்பீர்கள். விராட் கோலியுடன் அது உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடி அனைத்து சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரியை டெஸ்ட் போட்டியின் சராசரியும் நெருங்கும். இந்த தலைமுறையின் முழுமையான பேட்ஸ்மேன் விராட் கோலி’’ என்றார்.
    Next Story
    ×